கோவாவின் புதிய முதலமைச்சரை நியமிக்‍க பாரதிய ஜனதா கட்சி தீவிரம் - காங்கிரஸ் கட்சியும் ஆட்சி அமைக்‍க களமிறங்குவதால் அரசியல் பரபரப்பு

Mar 18 2019 4:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
கோவா முதல்வர் மனோகர் பாரிக்‍கர் மறைவை தொடர்ந்து புதிய முதல்வராக பாஜக வின் Pramod Sawant பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், அதனை ஏற்க கூட்டணி கட்சிகள் மறுத்துள்ளன. கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவை தொடர்ந்து, அங்கு புதிய முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக பாஜக தனது கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. இன்று காலை கோவா வந்த பா.ஜ.க. மூத்த தலைவர் திரு. நிதின் கட்காரி கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆனால் அதில் உடன்பாடு எட்டப்படவில்லையென பாஜக எம்.எல்.ஏவும் துணை சபாநாயகருமான திரு.மைக்‍கேல் லோபோ தெரிவித்தார். அதேநேரம் பாஜக எம்.எல்.ஏ-வும் கோவா சட்டமன்ற சபாநாயகருமான Pramod Sawant அடுத்த முதல்வராக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதற்கு பாஜக.வின் கூட்டணி கட்சிகளான எம்.ஜி.பி மற்றும் ஜி.எஃப் கட்சிகள் மறுத்துவிட்டதால் முதலமைச்சர் தேர்வில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 14 உறுப்பினர்களுடன் தனிப்பெருங்கட்சியாக இருக்‍கும் காங்கிரசும் ஆட்சி அமைக்க முயற்சித்து வருகிறது. 40 எம்.எல்.ஏக்களை கொண்ட கோவா சட்டமன்ற தொகுதியில் 4 இடங்கள் காலியாக உள்ளன. கடந்த 48 மணி நேரத்தில் 2 முறை காங்கிரஸ் ஆட்சியமைக்‍க உரிமை கோரி கோவா ஆளுநர் Mridula Sinha-க்‍கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்‍கது. இதனால் கோவாவில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3369.00 Rs. 3526.00
மும்பை Rs. 3489.00 Rs. 3311.00
டெல்லி Rs. 3313.00 Rs. 3491.00
கொல்கத்தா Rs. 3313.00 Rs. 3491.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 44.50 Rs. 44500.00
மும்பை Rs. 44.50 Rs. 44500.00
டெல்லி Rs. 44.50 Rs. 44500.00
கொல்கத்தா Rs. 44.50 Rs. 44500.00