அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களுக்கு ஒரே சின்னம் வழங்க வலியுறுத்தல் - தலைமை தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் சார்பில் மனு

Mar 26 2019 7:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில், அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகத்திற்கு பொதுச்சின்னம் வழங்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து கழக வேட்பாளர்களுக்கு ஒரே சின்னம் ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தி, கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகத்திற்கு குக்‍கர் சின்னம் வழங்கக்‍கோரி உச்சநீதிமன்றத்தில் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்‍கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

தலைமை நீதிபதி திரு.ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பாக நடைபெற்ற விசாரணையில், திரு.டிடிவி தினகரன் தரப்பில் மூத்த வழக்‍கறிஞர் திரு.கபில் சிபல் ஆஜராகி வாதிட்டார். இந்த இறுதிக்‍கட்ட வாதத்தின்போது, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகத்திற்கு குக்‍கர் சின்னத்தை ஒதுக்‍க வேண்டுமென அவர் கேட்டுக்‍கொண்டார். குக்‍கர் சின்னம் இல்லையென்றால், ஏதாவது ஒரு பொதுச்சின்னத்தை ஒதுக்‍க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஒரு அரசியல் கட்சிக்‍கு பொதுச்சின்னம் ஒதுக்‍க உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியும் என அவர் எடுத்துரைத்தார். டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்கனவே வழங்கியதுபோல், உச்சநீதிமன்றமும் பொதுச்சின்னம் வழங்க உத்தரவிடலாம் என எடுத்துரைக்‍கப்பட்டது. இதேபோல், தேர்தல் ஆணையம் தரப்பிலும் வாதங்கள் நடைபெற்றன.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், திரு.டிடிவி தினகரன் தரப்புக்‍கு ஏன் பொதுச்சின்னம் ஒதுக்‍கக்‍கூடாது? என தேர்தல் ஆணையத்திற்கு கேள்வி எழுப்பினர். இதைத்தொடர்ந்து, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகத்திற்கு பொதுச்சின்னம் வழங்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர். அதன்படி, தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறும் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்‍கும் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகத்திற்கு பொதுச்சின்னம் வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்‍கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு ஒரேசின்னம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி, கழக துணை பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் சார்பில் வழக்கறிஞர் திரு.ராஜா செந்தூர்பாண்டியன், இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00