'பி.எம். நரேந்திரமோடி' திரைப்படம் தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளதா? - தேர்தல் ஆணையமே முடிவெடுக்‍க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

Apr 9 2019 6:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

"பி.எம்.நரேந்திரமோடி" திரைப்படத்திற்கு தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. படத்தை வெளியிடுவது குறித்து தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் எனவும் கருத்து தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திரமோடியின் வாழ்க்கை வரலாறை மையமாகக் கொண்டு "பி.எம்.நரேந்திரமோடி" என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. நடிகர் விவேக் ஓபராய், பிரதமர் மோடியின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், இந்த திரைப்படத்தை வெளியிடுவது விதிமீறல் என எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்கக்கோரி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமன் தன்வார் என்பவர், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதிகள், படத்தில் தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்தும், அதனை தற்போது வெளியிடலாமா, வேண்டாமா என்பது குறித்தும் தேர்தல் ஆணையமே முடிவு செய்யலாம் எனவும் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00