பட்டப்படிப்புக்‍குப் பிறகு பள்ளி படிப்பா? - வேட்புமனுவில் கல்வித் தகுதியை மாற்றி மாற்றி குறிப்பிடும் மத்திய அமைச்சர் ஸ்திருதி இரானி

Apr 12 2019 1:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்திய அமைச்சர் திருமதி. ஸ்மிருதி இரானி, கடந்த முறை மக்‍களவை தேர்தலின்போது தாக்‍கல் செய்த வேட்புமனுவில், பட்டப்படிப்பு முடித்ததாக குறிப்பிட்டிருந்த நிலையில், நேற்று அமேதியில் தாக்‍கல் செய்த மனுவில், பள்ளிப்படிப்பு மட்டுமே முடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

2014ம் ஆண்டு மக்‍களவை தேர்தலின்போது, வேட்புமனு தாக்‍கல் செய்த பா.ஜ.க.வின் திருமதி. ஸ்மிருதி இரானி, 1996-ம் ஆண்டு டெல்லி பல்கலைக்‍கழகத்தில் பட்டபடிப்பு முடித்தாக தகவல் அளித்திருந்தார். இந்த தகவல் போலியானது என தொடரப்பட்ட வழக்‍கு டெல்லி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்‍கில், ஸ்மிருதியின் கல்வி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இம்முறை அமேதி தொகுதியில் போட்டியிடும் ஸ்மிருதி இரானி, நேற்று தாக்‍கல் செய்த தனது வேட்புமனுவில், பள்ளி படிப்பு மட்டுமே முடித்திருப்பதாகவும், பட்டப்படிப்பினை முடிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஸ்மிருதி இரானி அளித்துள்ள கல்வி தகுதி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00