ரஃபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமர் மோடியை விமர்சித்தது தொடர்பான அவமதிப்பு வழக்‍கு - உச்சநீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்து விளக்‍கம் அளித்தார் ராகுல் காந்தி

Apr 22 2019 4:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் திரு. மோடியை விமர்சித்தது தொடர்பாக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்‍கில், காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல் காந்தி, தனது வருத்தத்தைப் பதிவு செய்தார்.

ரஃபேல் விமான ஊழல் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரணை நடத்தக்கோரி, உச்சநீதிமன்றத்தில் தாக்‍கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்‍களை விசாரித்த நீதிபதிகள், பிரபல ஆங்கில நாளிதழில் வெளியான ரகசிய ஆவணங்களை, விசாரணைக்‍கு ஆதாரமாக பயன்படுத்தலாம் என கடந்த 10ம் தேதி உத்தரவிட்டனர். உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மத்திய பா.ஜ.க. அரசுக்‍கு பின்னடைவாக கருதப்பட்டது.

இந்த உத்தரவை வரவேற்ற காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல் காந்தி, காவலாளி எனக்‍ கூறிக்‍ கொள்ளும் பிரதமரே திருடனாக உள்ளார் என கடுமையாக விமர்சித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த பா.ஜ.க., உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்‍கு தொடர்ந்தது. இதுகுறித்து விளக்‍கம் அளிக்‍க, ராகுல் காந்திக்‍கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், அவர் இன்று வருத்தம் தெரிவித்தார். பிரதமர் பற்றி தாம் கூறிய கருத்து, அரசியல் எதிரிகளால் தவறாக பரப்பப்பட்டதாக அவர் விளக்கம் அளித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00