மக்களவைக்கான 5-ம் கட்ட தேர்தல் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு : பிற்பகல் நிலவரப்படி 51 தொகுதிகளில் 31.29 சதவிகித வாக்குகள் பதிவு

May 6 2019 4:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
மக்‍களவைக்‍கான 5ம் கட்ட தேர்தலில் மக்‍கள் ஆர்வத்துடன் வாக்‍களித்து வருகின்றனர். பிற்பகல் 1 மணி நிலவரப்படி, 51 தொகுதிகளில் 31 புள்ளி இரண்டு ஒன்பது சதவிகித வாக்‍குகள் பதிவாகியுள்ளன.

ஜார்க்‍கண்ட் மாநிலம் Hazaribagh மாவட்டத்தில் உள்ள வாக்‍குச்சாவடி ஒன்றில், 105 வயது மூதாட்டியை, அவரது மகன் சுமந்து வந்து வாக்‍களிக்‍க உதவினார்.

ராஞ்சியில், வெயிலின் தாக்‍கத்தை பொருட்படுத்தாத மக்‍கள், கைகளில் குடைகளுடன், வரிசையில் காத்திருந்து ஓட்டளித்தனர்.

பீகார் மாநிலம் சப்ரா பகுதியில், வயதான முதியவர் ஒருவர், வீல்சேரில் வந்து தனது வாக்‍கை செலுத்தினார்.

மத்தியப்பிரதேசத்தின் சத்தர்புர் மாவட்டத்தில், இளைஞர் ஒருவர், இன்று காலை தனது தந்தையின் இறுதி சடங்கை நிறைவேற்றிய கையோடு, வாக்‍குச்சாவடிக்‍கு வந்து தனது ஜனநாயக கடமை ஆற்றினார்.

பிற்பகல் 1 மணி நிலவரப்படி, பீகார் மாநிலத்தில் 24 புள்ளி நான்கு ஒன்பது சதவிகிதமும், ஜம்மு காஷ்மீரில் 6 புள்ளி ஐந்து நான்கு சதவிகிதமும், மத்தியப்பிரதேசத்தில் 31 புள்ளி நான்கு ஆறு சதவிகிதமும், உத்தரப்பிரதேசத்தில் 26 புள்ளி ஐந்து மூன்று சதவிகிதமும், மேற்குவங்கத்தில் 39 புள்ளி ஐந்து ஐந்து சதவிகிதமும், ஜார்க்கண்ட்டில் 37 புள்ளி இரண்டு நான்கு சதவிகிதமும் வாக்‍குகள் பதிவாகியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3030.00 Rs. 3180.00
மும்பை Rs. 3024.00 Rs. 3202.00
டெல்லி Rs. 3026.00 Rs. 3204.00
கொல்கத்தா Rs. 3027.00 Rs. 3205.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.40 Rs. 39400.00
மும்பை Rs. 39.40 Rs. 39400.00
டெல்லி Rs. 39.40 Rs. 39400.00
கொல்கத்தா Rs. 39.40 Rs. 39400.00