ஒடிசாவில் புயல் பாதித்த பகுதிகளில் மோடி ஆய்வு - புயல் நிவாரண நிதியாக மேலும் 1000 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவிப்பு

May 7 2019 1:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஒடிஷாவில் ஃபோனி புயலால் பாதிக்‍கப்பட்ட பகுதிகளை இன்று நேரில் பார்வையிட்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி, அம்மாநிலத்திற்கு புயல் நிவாரண நிதியாக மேலும் ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார்.

ஃபோனி புயலால் ஒடிஷா மாநிலம் கடுமையாக பாதிக்‍கப்பட்டுள்ளது. புயலின் போது, பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் புரி மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடானது. ஃபோனி புயலுக்‍கு இதுவரை 34 பேர் பலியாகி உள்ள நிலையில், பாதிக்‍கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறன. சேதம் குறித்து டோர்னியர் விமானங்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோ காட்சிகள், நிவாரணப் பணிகளுக்கான திட்டமிடலுக்கு மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று ஒடிஷா சென்ற பிரதமர் திரு. மோடி, புயல் பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். பாதிப்புகளை பார்வையிட ஒடிஷா வந்த பிரதமரை அம்மாநில முதலமைச்சர் திரு. நவீன் பட்நாயக், ஆளுநர் திரு. கணேஷி லால் உள்ளிட்டோர் வரவேற்றனர். ஒடிஷாவில் புயல் பாதிப்புகளை பார்வையிட்ட பிரதமர், அம்மாநிலத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என தெரிவித்தார். ஏற்கனவே ஒடிஷாவுக்‍கு 381 கோடி ரூபாய் புயல் நிவாரணம் அளிக்‍கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3030.00 Rs. 3180.00
மும்பை Rs. 3024.00 Rs. 3202.00
டெல்லி Rs. 3026.00 Rs. 3204.00
கொல்கத்தா Rs. 3027.00 Rs. 3205.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.40 Rs. 39400.00
மும்பை Rs. 39.40 Rs. 39400.00
டெல்லி Rs. 39.40 Rs. 39400.00
கொல்கத்தா Rs. 39.40 Rs. 39400.00