சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - நாடு முழுவதும் 91 புள்ளி ஒரு சதவீதம் பேர் தேர்ச்சி

May 6 2019 4:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பெரும் குழப்பத்திற்கிடையே, இன்று திடீரென இணையதளத்தில் வெளியானது.

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இம்மாதம் 3-வது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்‍கப்பட்டது. ஆனால் நேற்றே முடிவுகள் வெளியாகும் என சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் தகவல் பரவியது. இதற்கு சிபிஎஸ்இ செய்தி தொடர்பாளர் மறுப்பு தெரிவித்ததுடன், தேர்வு முடிவுகள் அறிவிப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிடப்படும் என குறிப்பிட்டிருந்தார். ஏஜென்சி செய்தியில் இன்று பிற்பகல் 3 மணிக்‍கு சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு வெளியாகும் என செய்தி வெளியானது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில், சிபிஎஸ்இ இணையதளத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. cbseresults.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் ​முடிவுகளை தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வை சுமார் 27 லட்சம் பேர் எழுதியுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் 25 ஆயிரம் இத்தேர்வில் பங்கேற்றனர்.

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பில் நாடு முழுவதும் 91 புள்ளி 1 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 99 புள்ளி எட்டு ஐந்து சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று திருவனந்தபுரம் முதலிடத்தை பெற்றுள்ளது. 99 சதவீதத்துடன் சென்னை மண்டலம் இரண்டாவது இடத்திலும், 95 புள்ளி எட்டு ஒன்பது சதவீத தேர்ச்சியுடன் அஜ்மீர் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3030.00 Rs. 3180.00
மும்பை Rs. 3024.00 Rs. 3202.00
டெல்லி Rs. 3026.00 Rs. 3204.00
கொல்கத்தா Rs. 3027.00 Rs. 3205.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.40 Rs. 39400.00
மும்பை Rs. 39.40 Rs. 39400.00
டெல்லி Rs. 39.40 Rs. 39400.00
கொல்கத்தா Rs. 39.40 Rs. 39400.00