ஃபானி புயலால் ஒடிசாவில் ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு, வரும் 20-ம் தேதி நடைபெறும் என மத்திய அரசு அறிவிப்பு - கர்நாடகாவில் தேர்வை தவறவிட்டவர்களுக்‍கும் மறுவாய்ப்பு

May 8 2019 12:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
பானி புயலால் ஒடிசாவில் ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு வரும் 20-ம் தேதி நடைபெறும் என்றும், கர்நாடகத்தில் ரயில் தாமதத்தால் நீட் தேர்வை தவறவிட்ட சுமார் 600 பேருக்கு அன்று மறுவாய்ப்பு அளிக்கப்படும் என மத்திய அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் ஹுப்ளியில் இருந்து மைசூர் சென்ற ஹம்பி எக்ஸ்பிரஸ் ரயில், தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது. இதனால் காலை 7 மணிக்கு வர வேண்டிய ரயில், பிற்பகல் 3 மணிக்கு வந்து சேர்ந்தது. ரயில் தாமதத்தால் நூற்றுக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வை எழுத முடியாமல் பரிதவித்தனர். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் அந்த மாணவர்களுக்கு, மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர், தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த நடவடிக்கைக்காக திரு. ஜவடேகருக்கு, கர்நாடக முதலமைச்சர் திரு. குமாரசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பானி புயலால் ஒடிசாவில் ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு வரும் 20-ம் தேதி நடைபெறும் என்றும், கர்நாடகத்தில் ரயில் தாமதத்தால் நீட் தேர்வை தவறவிட்ட சுமார் 600 பேருக்கு அதே நாளில் மறுவாய்ப்பு அளிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00