ரமலான் நோன்பு, கோடை வெப்பம் காரணமாக வாக்‍குப்பதிவை காலை 5.30 மணிக்‍கு தொடங்கக்‍கோரிய வழக்‍கு - அனுமதி வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு

May 14 2019 1:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

வெயிலின் தாக்‍கம் மற்றும் ரம்ஜான் நோன்பு காரணமாக, மக்களவை தேர்தலின் அடுத்த கட்ட வாக்குப்பதிவுகளை காலை 5.30 மணிக்கே தொடங்க உத்தரவிடக் கோரி தாக்‍கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நாடாளுமன்ற மக்‍களவைக்‍கான ஆறு கட்ட தேர்தல்கள் ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில், ஏழாவது கட்ட தேர்தல் மட்டுமே நடைபெற வேண்டி உள்ளது. இதனிடையே, ரம்ஜான் காலம் என்பதாலும், வெயிலின் தாக்‍கம் அதிகரித்து வருவதாலும், தேர்தலை காலை 5.30 மணிக்‍கே தொடங்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்‍கு தொடரப்பட்டது. முகமது நிஸாம் பாஷா என்ற வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில், முதல்கட்ட விசாரணையின்போது, எஞ்சியுள்ள தேர்தலின் வாக்‍குப்பதிவை, காலை 5.30 மணிக்‍கே தொடங்க முடியுமா என தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது குறித்து பரிசீலனை செய்து உரிய முடிவெடுக்கவும் அறிவுறுத்தினர். இந்நிலையில், காலை 5.30 மணிக்கே வாக்‍குப்பதிவை தொடங்க உத்தரவிடக் கோரி தாக்‍கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00