கொல்கத்தாவில் பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா, கலந்து கொண்ட பேரணியில் வன்முறை - கொல்கத்தா பல்கலை வளாகத்தில் இருந்த வித்யாசாகர் சிலை தகர்ப்பு

May 15 2019 6:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொல்கத்தாவில் பாரதிய ஜனதா தலைவர் திரு. அமித்ஷா கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார பேரணியில் வன்முறை வெடித்தது. கொல்கத்தா பல்கலை வளாகத்தில் இருந்த வங்காள சீர்திருத்த தந்தை Ishwar Chandra Vidyasagar இன் சிலையை வன்முறையாளர்கள் உடைத்து நொறுக்கிவிட்டனர்.

மேற்குவங்கத் தலைநகர் கொல்கத்தாவில் பாரதிய ஜனதா தலைவர் திரு. அமித்ஷா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரது பிரச்சார வாகனத்தைத் தொடர்ந்து, பாரதிய ஜனதா நிர்வாகிகளும், தொண்டர்களும் கார்கள் மற்றும் பல்வேறு வாகனங்களில் ஊர்வலமாகச் சென்று கொண்டிருந்தனர். கொல்கத்தா பல்கலைக்‍கழக சாலை வழியாக அமித்ஷாவின் பிரச்சார வாகனம் சென்றபோது, கம்யூனிஸ்ட் மாணவர்களுக்‍கும், பாரதிய ஜனதா மாணவர்களுக்‍கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. கல் வீச்சில் பலர் காயமடைந்தனர். கல்லூரி விடுதிக்‍கு வெளியே தீ வைப்புச் சம்பவங்களும் நிகழ்ந்தன. பாரதிய ஜனதாவினரால் தீ வைக்‍கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மோதலின் போது பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த வங்க மொழியை செழுமைப்படுத்திய Ishwar Chandra Vidyasagar சிலையை வன்முறையாளர்கள் உடைத்து நொறுக்கிவிட்டனர்.

வன்முறைச் சம்பவங்களால் கொல்கத்தா பல்கலைக்‍கழக சாலையிலும், சுற்று வட்டாரப் பகுதிகளிலும் பெரும் பதற்றம் ஏற்பட்டதால் பாதுகாப்புப் பணியில் பெருமளவு போலீசார் குவிக்‍கப்பட்டனர். வன்முறைவெடித்த பலகலை வளாகத்தை முதலமைச்சர் மம்தா பானர்ஜி பார்வையிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00