மத்தியப் பிரதேச சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அரசு தயார் - பா.ஜ.க.-வின் கோரிக்‍கையை ஏற்று முதலமைச்சர் கமல்நாத் அதிரடி அறிவிப்பு

May 22 2019 11:08AM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்திய பிரதேச சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அரசு தயாராக இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் திரு. கமல்நாத் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாக தெரிவித்த பா.ஜ.க.வின் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் கோபால் பார்கவா, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேலுக்கு கடிதம் எழுதி இருப்பதாக கூறினார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த முதலமைச்சர் திரு. கமல்நாத், மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தபின் கடந்த 5 மாதங்களில் 4 முறை பெரும்பான்மையை நிரூபித்து இருப்பதாக கூறினார். மீண்டும் நிரூபிக்க வேண்டும் என்று பா.ஜ.க வலியுறுத்துவதால் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறினார். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு காங்கிரஸ் அரசு தயாராகவே இருக்கிறது என்றும் முதலமைச்சர் திரு. கமல்நாத் ​திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00