சொத்து குவிப்பு வழக்கில் முலாயம் சிங், அகிலேஷ் யாதவுக்கு எதிராக ஆதாரம் ஏதும் இல்லை - உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல்

May 21 2019 5:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

சொத்து குவிப்பு வழக்கில் சமாஜ்வாதி தலைவர்கள் திரு. முலாயம் சிங் யாதவ், திரு. அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கு எதிராக ஆதாரம் ஏதும் இல்லை என உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.

சமாஜ்வாதி தலைவர்கள் திரு. முலாயம் சிங் யாதவ், திரு. அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக, காங்கிரசை சேர்ந்த திரு. விஸ்வநாத் சதுர்வேதி, கடந்த 2005ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்‍கு தொடர்ந்தார். வழக்‍கை ஏற்றுக்‍கொண்ட உச்சநீதிமன்றம், 2007ம் ஆண்டு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முலாயம் சிங் தரப்பில், தாக்‍கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்‍கப்பட்டது. மேலும், விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி சி.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இவ்வழக்‍கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று சிபிஐ தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், முலாயம் மற்றும் அகிலேஷுக்‍கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் ஆதாரம் ஏதும் இல்லை எனக் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00