தேர்தலில் வெற்றிபெற்ற பிரதமர் மோடிக்‍கு மேலும் பல உலகத் தலைவர்கள் பாராட்டு - குவைத் இளவரசர் மற்றும் பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து கடிதம்

May 24 2019 4:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திரு.நரேந்திர மோடிக்‍கு, உலக தலைவர்கள் பலரும் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

மக்‍களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள பிரதமர் திரு.மோடிக்கு, அமெரிக்‍க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இலங்கை அதிபர் சிறிசேனா, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, ரஷ்ய அதிபர் Vladimir Putin, நேபாள பிரதமர் Sharma Oli, அஃப்கானிஸ்தான் அதிபர் Ashraf Ghani உள்ளிட்ட தலைவர்கள் ஏற்கெனவே வாழ்த்து தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக கனடா நாட்டு பிரதமர் Justin Trudeau வாழ்த்து தெரிவித்துள்ளார். கனடா மற்றும் இந்தியர்களின் வாழ்க்‍கை தரத்தை மேம்படுத்திட மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆர்வம் கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

அமெரிக்‍க குடியரசு துணைத் தலைவர் மைக்‍ ஃபென்ஸ், இந்தியாவை ஒரு பாதுகாப்பான வளமான நாடாக மாற்றும் வகையில், மோடியுடன் இணைந்து பணி புரிவதை ஆவலுடன் எதிர்நோக்‍கி இருப்பதாக கூறியுள்ளார். இதேபோல், குவைத் நாட்டின் இளவரசர் ஷேக்‍ நவாஃப் அல் அகமத், பிரதமர் ஷேக் ஜாபர் அல் முபாரக் ஆகியோரும் பிரதமர் நரேந்திர மோடிக்‍கு வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00