கர்நாடகாவில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதளக் கூட்டணி படுதோல்வி எதிரொலி - ஆட்சி கவிழ்ப்பு தொடர்பான சதிச் செயலை முறியடிக்‍க முதலமைச்சர் குமாரசாமி அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டி முக்‍கிய ஆலோசனை

May 24 2019 5:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடகாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதளக் கூட்டணி படுதோல்வி அடைந்துள்ள நிலையில், முதலமைச்சர் திரு.குமாரசாமி தலைமையில் இன்று அமைச்சரவை கூடி முக்‍கிய ஆலோசனை நடத்தியது.

கர்நாடக மாநிலத்தில் 28 மக்களவைத் தொகுதிகளில் 21 இடங்களில் காங்கிரசும், 7 இடங்களில் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியும் போட்டியிட்டன. பாரதிய ஜனதா வேட்பாளர்கள் 27 இடங்களிலும், இக்கட்சியின் ஆதரவு பெற்ற நடிகை சுமலதா மாண்டியா தொகுதியிலும் களம் இறங்கினார்கள். தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், காங்கிரசும் - மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியும் தலா ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. முதலமைச்சர் திரு.குமாரசாமியின் மகன் திரு.நிகில் குமாரசாமி நடிகை சுமலதாவிடம் தோல்வியுற்றார். பாரதிய ஜனதா 25 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதைப் பயன்படுத்தி திரு.குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்க்க கர்நாடக பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா முயற்சி மேற்கொள்வதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், கர்நாடக தலைநகர் பெங்களூருவில் இன்று அமைச்சரவைக்‍கூட்டம் நடைபெற்றது. ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் பாரதிய ஜனதா தீவிரம் காட்டினால், அதனை எவ்வாறு முறியடிப்பது என்பது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களுக்‍குப் பேட்டியளித்த கர்நாடக துணை முதலமைச்சர் திரு.பரமேஷ்வரா, குமாரசாமி தலைமையிலான ஆட்சி தொடரும் என தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00