நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு வரும் 29ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் - பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷியை சந்தித்து வாழ்த்து பெற்றார் மோடி

May 24 2019 4:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்தியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா அரசு, வரும் 29ம் தேதி பதவி ஏற்க உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 542 மக்களவைத் தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி 345 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 97 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதுதவிர, YSR காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலா 22 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 10 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 5 இடங்களிலும், தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சி 9 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மத்தியில் இரண்டாவது முறையாக திரு.நரேந்திர மோடி தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கிறது. இதற்காக, நாளை மறுநாள் குடியரசுத்தலைவர் திரு.ராம்நாத் கோவிந்தை திரு.நரேந்திர மோடி சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார். இதனைத்தொடர்ந்து, வரும் 29ம் தேதி மத்தியில் புதிய அரசின் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, பிரதமர் திரு. மோடி இன்று டெல்லியில் உள்ள பா.ஜ.க. மூத்த தலைவர் திரு. அத்வானியின் இல்லத்திற்குச் சென்று அவரிடம் வாழ்த்து பெற்றார்.

இதேபோல், மற்றொரு மூத்த தலைவரான திரு. முரளி மனோகர் ஜோஷியையும் திரு. மோடி சந்தித்து வாழ்த்துபெற்றார். அப்போது பாரதிய ஜனதா தேசியத் தலைவர் திரு. அமித்ஷா உடனிருந்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00