கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி : 86 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அறிவிப்பு

Jun 5 2019 3:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த இளைஞருக்‍கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 86 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கேரளாவில், கடந்த ஆண்டு மே மாதம், நிபா வைரஸ் தாக்கி, கோழிக்கோடு மாவட்டத்தில் 17 பேர் உயிரிழந்தனர். ஓராண்டு கழித்து கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் தாக்‍கியுள்ளது. எர்ணாகுளம் மாவட்டம் வடபரவூரை சேர்ந்த இளைஞருக்‍கு உடல்நல பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், அவருக்‍கு நிஃபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. புனேவில் நடைபெற்ற ரத்த பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் திருமதி.கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட நபருடன் மேலும் 86 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், எர்ணாகுளம் மருத்துவக் கல்லூரியில் இதற்காக தனி அறை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, நிபா வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை என்றும், முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கைகள் எடுக்‍கப்பட்டு வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00