நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவு - ஒரு தொகுதிக்‍கு 100 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டதாக ஆய்வில் தகவல்

Jun 4 2019 5:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாட்டின் 17வது மக்‍களவையை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட தேர்தலே, உலக அளவில் அதிக செலவில் நடத்தப்பட்ட தேர்தல் என தனியார் ஆய்வு நிறுவனம் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. இத்தேர்தலுக்‍காக 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்‍கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

நடந்து முடிந்த மக்‍களவை தேர்தலுக்‍கான செலவுகள் குறித்த புள்ளிவிவரங்களை சி.எம்.எஸ். என்ற தனியார் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி சராசரியாக ஒரு ஓட்டுக்கு 700 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும், ஒரு மக்களவை தொகுதிக்கு 100 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிய நிலையில், 2019 தேர்தலில் அது 60 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. உலக அளவில் இந்த தேர்தலே அதிக செலவில் நடத்தப்பட்டுள்ளதாக சி.எம்.எஸ். நிறுவனம் தெரிவித்துள்ளது. மொத்த தொகையில், தேர்தல் ஆணையம் மட்டுமே 10 முதல் 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவிட்டதாகவும், பா.ஜ.க. சார்பில் 45 சதவீத தொகை செலவிடப்பட்டதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. தேர்தலில் மிகப்பெரிய தொகை செலவிடப்பட்டுள்ளது ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தல் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3144.00 Rs. 3300.00
மும்பை Rs. 3308.00 Rs. 3130.00
டெல்லி Rs. 3311.00 Rs. 3133.00
கொல்கத்தா Rs. 3312.00 Rs. 3134.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.30 Rs. 41300.00
மும்பை Rs. 41.30 Rs. 41300.00
டெல்லி Rs. 41.30 Rs. 41300.00
கொல்கத்தா Rs. 41.30 Rs. 41300.00