ஆட்சி போனாலும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க போவதில்லை : புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

Jun 5 2019 6:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆட்சி போனாலும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க போவதில்லை என புதுச்சேரி முதலமைச்சர் திரு. நாராயணசாமி கூறியுள்ளார்.

ஹைட்ரோ- கார்பன் திட்டத்தை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பத்தில் கண்டனபொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் புதுச்சேரி முதலமைச்சர் திரு. நாராயணசாமி, மக்களவை உறுப்பினர் திரு. ரவிக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் திரு. முத்தரசன், தமிழக முன்னாள் அமைச்சர் திரு. பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் திரு. நாராயணசாமி, ஹைட்ரோகார்பன் திட்டத்தை புதுச்சேரி அரசு ஒப்புதல் இல்லாமல் செயல்படுத்த எக்காலத்திலும் அனுமதிக்கமாட்டோம் என்று தெரிவித்தார். வேதாந்தா நிறுவனம் தனியாகவோ அல்லது மத்திய அரசு ராணுவத்துடன் வந்தாலும், அதனால் ஆட்சி போனாலும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க போவதில்லை என தெரிவித்தார். முடிவில், செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் திரு. முத்தரசன், ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் புதுச்சேரி முதலமைச்சர் திரு. நாராயணசாமி போல் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாத நிலையில், தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு உள்ளது என்றும், போராட்டம் நடத்த அனுமதி அளிக்காமலும், மக்கள் நலனுக்காக போராடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் தமிழக அரசை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00