வாக்‍குப்பதிவு இயந்திரம் குறித்து தவறான குற்றச்சாட்டு தெரிவித்தால் தண்டனை அளிக்‍கும் சட்டம் குறித்து பரிசீலனை - தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பேட்டி

Jun 6 2019 12:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
வாக்‍குப்பதிவு இயந்திரம் குறித்து தவறான குற்றச்சாட்டு தெரிவித்தால் தண்டனை அளிக்‍கும் சட்டம் குறித்து பரிசீலிக்‍கப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் திரு.சுனில் அரோரா தெரிவித்தார்.

வாக்‍காளர் ஒருவர், தான் செலுத்தும் வாக்‍கு முறையாகப் பதிவாகவில்லை என வாக்‍குப்பதிவு இயந்திரம் மீதோ, அல்லது வாக்‍கு ஒப்புகைச்சீட்டு இயந்திரம் மீதோ புகார் தெரிவிக்‍க முடியும். அப்படி குறிப்பிட்ட வாக்‍காளர் புகார் தெரிவித்தால், தேர்தல் நடத்தை விதிகள் பிரிவு 49 எம்.ஏ.வின் கீழ் அவருக்‍கு சோதனை வாக்‍கு செலுத்த அனுமதி அளிக்‍கப்படும். பின்னர், சோதனை வாக்‍கை அடிப்படையாகக்‍ கொண்டு, அவரது புகார் குறித்து ஆராயப்படும். அதில், அவர் தெரிவித்த குற்றச்சாட்டு பொய் என்பது கண்டறியப்பட்டால், இந்திய தண்டனை சட்டத்தின் 177வது பிரிவின்கீழ் அவருக்‍கு தண்டனை வழங்க தேர்தல் அதிகாரிகளுக்‍கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பிரிவின்படி அவருக்‍கு அதிகபட்சம் 6 மாத காலம் சிறைத்தண்டனை வழங்கவோ அல்லது 1000 ரூபாய் அபராதம் விதிக்‍கவோ முடியும். இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்‍கில், தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் நோட்டீஸ் அனுப்பியது. இது​போன்று கடும் தண்டனை இல்லாவிட்டால், வாக்‍குப்பதிவு இயந்திரங்கள் மீது மக்‍கள் தேவையில்லாமல் பொய்க்‍ குற்றச்சாட்டு எழுப்புவார்கள் என, தேர்தல் ஆணையத்தின் தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் திரு.சுனில் அரோரா, பொய்க்‍குற்றச்சாட்டு தெரிவித்து, தேர்தல் நடைமுறைகளுக்‍கு இடையூறு ஏற்படுத்த முயல்வோருக்‍கு எதிராகவே இதுபோன்ற சட்டப்பிரிவுகள் இயற்றப்பட்டதாக குறிப்பிட்டார். தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், 49 எம்.ஏ. பிரிவில் மாற்றம் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தப்பட இருப்பதாக தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3144.00 Rs. 3300.00
மும்பை Rs. 3308.00 Rs. 3130.00
டெல்லி Rs. 3311.00 Rs. 3133.00
கொல்கத்தா Rs. 3312.00 Rs. 3134.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.30 Rs. 41300.00
மும்பை Rs. 41.30 Rs. 41300.00
டெல்லி Rs. 41.30 Rs. 41300.00
கொல்கத்தா Rs. 41.30 Rs. 41300.00