கேரளாவில் வேகமாக பரவிவரும் நிபா வைரஸ் - அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் உஷார் நிலை

Jun 7 2019 12:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரளாவை மிரட்டி வரும் 'நிபா வைரஸ்' பாதிப்பை அடுத்து, கர்நாடாகாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வவ்வாலில் இருந்து விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் பரவும் 'நிபா வைரஸ்' பாதிப்பால் கேரளாவில், கடந்தாண்டு 17 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், கேரளாவில், எர்ணாகுளத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவருக்கு, நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து கொச்சி மருத்துவமனையில், அவருக்கு சிகிச்சையளித்த இரண்டு நர்சுகள் மற்றும் மாணவரின் உறவினர்கள் உட்பட, 5 பேருக்கு, நிபா வைரஸ் அறிகுறி கண்டறியப்பட்டது. அவர்களுடைய ரத்த மாதிரி பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள், தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நிபா வைரசை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்துவதற்காக கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் உயர்மட்டக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

இதனிடையே, கர்நாடகாவில், 'நிபா' வைரஸ் பாதிப்பு ஏற்படலாம் என, எட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.சாம்ராஜ்நகரா, மைசூரு, குடகு, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி, ஷிவமொகா, சிக்கமகளூரு ஆகிய மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3271.00 Rs. 3427.00
மும்பை Rs. 3308.00 Rs. 3130.00
டெல்லி Rs. 3311.00 Rs. 3133.00
கொல்கத்தா Rs. 3312.00 Rs. 3134.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.50 Rs. 41500.00
மும்பை Rs. 41.50 Rs. 41500.00
டெல்லி Rs. 41.50 Rs. 41500.00
கொல்கத்தா Rs. 41.50 Rs. 41500.00