காணாமல் போன இந்தியப் போர் விமானத்தை தேடும் பணி தீவிரம் - விமானத்தில் பயணித்த 13 பேரின் நிலை என்னவாயிற்று என அச்சம்

Jun 7 2019 12:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
சீன எல்லையில் மாயமான இந்திய விமானப்படை விமானத்தை தேடும் பணி இரவு-பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விமானம் மாயமாகி மூன்று தினங்கள் ஆகிவிட்டதால் அதில் பயணித்த 13 பேரின் நிலை என்ன ஆனது என்ற அச்சம் எழுந்துள்ளது.

விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் ஒன்று விமானப்படை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 13 பேருடன் கடந்த 3-ந்தேதி அசாமின் ஜோர்காட் விமானப்படை தளத்தில் இருந்து அருணாசல பிரதேசத்தின் மென்சுகா விமானப்படை தளத்துக்கு புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட 33 நிமிடங்களில் திடீரென மாயமானது. அருணாசல பிரதேசத்தில் சீன எல்லையோரம் உள்ள மலைப்பாங்கான காட்டுப்பகுதிக்கு மேலே சென்றபோது விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. விமானம் மற்றும் அதில் இருந்தவர்களின் கதி என்ன? என்பது குறித்து தெரியவில்லை.

விமானத்தை தேடும் பணிகளில் விமானப்படை விமானங்கள், ராணுவ வீரர்கள் மற்றும் கடற்படையின் ரேடார்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவும் இந்த தேடும் பணிகளில் இணைந்துள்ளது. விமானத்தை தேடும் பணிகள் நேற்று 3-வது நாளாக தொடர்ந்தது. அருணாசல பிரதேசத்தின் மேற்கு சியாங் மாவட்டம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த பணிகள் நடந்தன. விமானப்படைக்‍குச் சொந்தமான சி-130 ஜே, ஏ.என்.32 மற்றும் 2 எம்.ஐ-17 ரக விமானங்கள், 2 ஹெலிகாப்டர்கள் பகலில் இந்த பணியில் ஈடுபட்டன. இதைப்போல 2 சுகோய்-30 ரக விமானங்கள், 2 சி-130ஜே விமானங்கள் இரவில் தேடும் பணியை தொடர்ந்தன. எனினும் மாயமான விமானத்தை பற்றிய எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடும் பணி முடுக்‍கிவிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3271.00 Rs. 3427.00
மும்பை Rs. 3308.00 Rs. 3130.00
டெல்லி Rs. 3311.00 Rs. 3133.00
கொல்கத்தா Rs. 3312.00 Rs. 3134.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.50 Rs. 41500.00
மும்பை Rs. 41.50 Rs. 41500.00
டெல்லி Rs. 41.50 Rs. 41500.00
கொல்கத்தா Rs. 41.50 Rs. 41500.00