கிர்கிஸ்தான் நாட்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு - சீன அதிபர் ஜின்பிங்கை ​நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார் பிரதமர் நரேந்திர மோடி

Jun 10 2019 5:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
கிர்கிஸ்தான் நாட்டில் நடக்க உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது, சீன அதிபர் ஜின்பிங்கை, பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்து பேசுகிறார்.

கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கேக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு, வரும் 13-ந் தேதி தொடங்குகிறது. 2 நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டின்போது, சீன அதிபர் ஜின்பிங்கை, பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்து பேச உள்ளார். சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி, பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பை அதிகாரபூர்வமாக உறுதி செய்தார். கடந்த ஆண்டு இரு தலைவர்களும், பல்வேறு நிகழ்ச்சிகளின் இடையே 4 முறை சந்தித்து பேசி இருக்கிறார்கள்.

கடந்த டிசம்பர் மாதம் ஆர்ஜென்டினாவில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டின் இடையே இவ்விரு தலைவர்களும் சந்தித்து, பரஸ்பர நம்பிக்கை, நட்பு ஆகியவற்றை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். கடந்த மாதம் நாடாளுமன்ற தேர்தலில் மோடி அபார வெற்றி பெற்றபோது, தேர்தல் முடிவு அதிகாரபூர்வமாக வெளியாவதற்கு முன்பாகவே ஜின்பிங் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததார். தற்போது, ஷாங்காய் உச்சி மாநாட்டின்போது, மோடியும், ஜின்பிங்கும் சந்தித்து பேசும்போது, இருதரப்பு உறவை புதிய உச்சத்துக்கு அழைத்துச்செல்லும் என்று எதிர்பார்க்‍கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00