வாயு புயல் காரணமாக குஜராத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆந்திராவிலிருந்து விரைந்தது பேரிடர் மீட்புப் படை

Jun 12 2019 5:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரபிக்கடலில் உருவான வாயு புயல் எதிரொலியாக, குஜராத்தில் உள்ள 10 மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்‍கப்பட்டுள்ளது. ஆந்திராவிலிருந்து பேரிடர் மீட்புப் படையினர் குஜராத் வந்து சேர்ந்துள்ளனர்.

தென்மேற்கு பருவமழை கடந்த 8-ம் தேதி தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக தற்போது மாறி இருக்கிறது. இந்த புயலுக்கு வாயு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இது தீவிர புயலாக மாறி குஜராத் நோக்கி நகர்ந்து வருகிறது. குஜராத் மாநிலம் விராவல் பகுதி அருகே, நாளை புயல் கரையைக்‍ கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் எச்சரிக்‍கையைத் தொடர்ந்து, அங்கு முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்‍கு விடுமுறை அளிக்‍கப்பட்டுள்ளது. ஆந்திராவிலிருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இந்திய போர் விமானம் மூலம் குஜராத் மாநிலம் ஜாம் நகர் வந்துள்ளனர். மீனவர்கள் மீன்பிடிக்‍க கடலுக்‍குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00