வாயு புயல் திசைமாறி ஓமனை நோக்கி நகர்ந்தது - குஜராத்தில் கனமழை எச்சரிக்‍கையால், கடலோர மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்‍கு விடுமுறை

Jun 14 2019 3:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

குஜராத்தை அச்சுறுத்தி வந்த வாயு புயல் திசைமாறி ஓமனை நோக்கி நகர்ந்துள்ளது. எனினும், தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கைகளை மேற்கொள்ள குஜராத் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அரபிக்‍கடலில் உருவான வாயு புயல் குஜராத்தை தாக்கும் என முதலில் கூறப்பட்டதால், அங்கு கடலோர பகுதிகளில் வசிக்கும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இந்நிலையில், வாயு புயல் திசை மாறி ஓமனை நோக்கி நகர்ந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும், குஜராத் கடலோர பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கைகளை மேற்கொள்ள குஜராத் முதலமைச்சர் திரு.விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார். சவுராஷ்ட்ரா மற்றும் கட்ச் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்‍கு இன்றும் விடுமுறை அளிக்‍கப்பட்டுள்ளது.

பாவ்நகர் விமான நிலையத்தில் இன்று காலைமுதல் போக்‍குவரத்து வழக்‍கம்போல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Diu மற்றும் போர்பந்தர் விமான நிலையங்களில் இன்று காலை 10 மணிமுதல் விமான சேவை தொடங்கும் என விமான போக்‍குவரத்து ஆணையரகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00