பீகார் மாநிலத்தில் வேகமாகப் பரவும் மூளைக்‍காய்ச்சல் - இரண்டு நாட்களில் 56 குழந்தைகள் உயிரிழந்த பரிதாபம்

Jun 14 2019 11:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

பீகார் மாநிலத்தில், கடந்த 2 நாட்களில் மட்டும் 56 குழந்தைகள் மூளைக்‍காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில், குழந்தைகளை தாக்கும் மூளைக்‍காய்ச்சல் நோய் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து அங்கு இந்த நோய் பரவியது. இதில் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் வரை 11 பேர் உயிரிழந்தனர். தற்போது இந்நோயின் தாக்‍கம் மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, முசாபர்பூர், கயா ஆகிய மாவட்டங்களில் நோயின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. முசாபர்பூர் நகரில் 45 குழந்தைகள் மூளைக்காய்சலுக்‍கு பலியாகினர். அங்குள்ள ஸ்ரீகிருஷ்ணா மருத்துவமனை கல்லூரியில் திடீர் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ள 133 குழந்தைகளுக்கு மூளைக்‍ காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது. ரத்தத்தில் குளுக்கோஸ் குறைவு காரணமாக நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பீகாரில் 12 மாவட்டங்களிலும் இந்த காய்ச்சல் தாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2 நாட்களில் மட்டும் 56 குழந்தைகள் உயிரிழந்தன. இதைத்தொடர்ந்து நிலைமையை ஆராய மத்திய நிபுணர் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00