பீகாரை தாக்கும் இரட்டைத் துயரம் - சுட்டெரிக்கும் வெயில் கொடுமை மற்றும் மூளைக்காய்ச்சலுக்கு 288 பேர் பலி - மாநில அரசின் அலட்சியப் போக்‍கைக்‍ கண்டித்து, வரும் 24-ஆம் தேதி ராஷ்டிரிய ஜனதா தளம் போராட்டம்

Jun 18 2019 3:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

பீகாரில் மூளைக்காய்ச்சலுக்கு பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது. அரசின் அலட்சியப் போக்‍கைக்‍ கண்டித்து, வரும் 24-ஆம் தேதி ராஷ்டிரிய ஜனதா தளம் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

பீகார் மாநிலத்தில் Acute Encephalitis Syndrome எனப்படும் மூளைக்காய்ச்சல் நோயால், ஏராளமான குழந்தைகள் பாதிக்‍கப்பட்டுள்ளன. வைரசால் பரவும் இந்த மூளைக் காய்ச்சல் ஏற்படும் போது அதிக அளவில் காய்ச்சல், உடல்சேர்வு, தலைவலி உண்டாகும். நீர்ச்சத்து, ரத்த சர்க்கரை குறைந்து உயிரிழப்பு ஏற்படுகிறது. பீகாரில் இந்த காய்ச்சலுக்‍கு பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது. முஷாபர்நகரில் மட்டும் 83 குழந்தைகள் பலியாகி உள்ளன. அங்குள்ள மருத்துவமனையில் மேலும் 290 குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பருவமழை இல்லாத நிலையில் இந்த நோய் குழந்தைகளுக்‍கு வேகமாக பரவி வரும் வேளையில் பீகார் மக்‍களை கடும் வெப்பம் வாட்டி வதைக்‍கிறது. இதன் காரணமாக முசாபர்பூரில் 8 வகுப்பு வரையிலான பள்ளிகள் 22-ம் தேதி வரை மூடப்படும் என்றும், மேல்நிலைப் பள்ளிகளில் காலை 10.30 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு முறையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே உயிரிழப்புக்கு காரணம் என ராஷ்டிரிய ஜனதா தளம் குற்றஞ்சாட்டியுள்ளது. அரசின் அலட்சியத்தைக்‍ கண்டித்து, பீகார் மாநிலம் முழுவதும் வரும் 24-ஆம் தேதி போராட்டம் நடத்தவுள்ளதாக அக்‍கட்சி அறிவித்துள்ளது.

வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் இயல்பைவிட அதிகமாக உள்ளது. பீகார் மாநில் கடந்த இரு நாட்களாக பகல் நேர வெப்பம் இயல்பு நிலையை கடந்து சுட்டெரிக்‍கிறது. இரு நாட்களில் மட்டும் 113 பேர் உயிரிழந்தனர். 100 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக அவுரங்காபாத் மாவட்டத்தில் 36 பேரும், கயா மாவட்டத்தில் 28 பேரும் உயிரிழந்தனர். இதையடுத்து வெயிலுக்கு பலியானோர் குடும்பத்தினருக்கு மாநில அரசு சார்பில் தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் வெப்பம் நிலவுவதால், பீகார் மாநிலம் முழுவதும் பள்ளிகளை 22-ஆம் தேதி வரை மூட முதலமைச்சர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00