மும்பை நகரைப் புரட்டிப்போட்ட கனமழை வெள்ளம் - 27 பேர் பலி -​ வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்‍கை

Jul 2 2019 6:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
மகாராஷ்டிர மாநிலத்தில் கனமழை வெள்ளத்திற்கு இதுவரை 27 பேர் பலியாகியுள்ளனர்.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, மகாராஷ்டிர மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மும்பை மற்றும் அதன் சுற்றுப்பகுதி சாலைகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. போக்‍குவரத்து முடங்கியுள்ளது. மும்பை மட்டுங்கா காவல் நிலையம் உட்பட அரசு அலுவலகங்களுக்குள் மழைநீர் புகுந்ததால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பலத்த மழையால் Palghar உள்ளிட்ட இடங்களில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. ​விமான சேவையும் முடங்கியுள்ளது. மராத்வாடா, விதர்பா ஆகிய மாவட்டங்களில் மேலும் மழை நீட்டிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, Malad என்ற இடத்தில் கனமழை பெய்தபோது, குடியிருப்பு பகுதியை யொட்டிய சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில் 12 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களில் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்‍காக அனுமதிக்‍கப்பட்டனர். அவர்களில் 4 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்‍கை 16-ஆக அதிகரித்துள்ளது.

இதேபோல் மழை தொடர்பான சம்பவங்களில் 11 பேர் உயிரிழந்தனர். இதனால் மழை காரணமாக இதுவரை 27 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3369.00 Rs. 3526.00
மும்பை Rs. 3489.00 Rs. 3311.00
டெல்லி Rs. 3313.00 Rs. 3491.00
கொல்கத்தா Rs. 3313.00 Rs. 3491.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 44.50 Rs. 44500.00
மும்பை Rs. 44.50 Rs. 44500.00
டெல்லி Rs. 44.50 Rs. 44500.00
கொல்கத்தா Rs. 44.50 Rs. 44500.00