வங்கிகளில் உரிமைக்கோராமல் கிடக்‍கும் பொதுமக்கள் பணம் - 14 ஆயிரத்து 578 கோடி ரூபாய் கேட்பாரற்று உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

Jul 2 2019 5:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
வங்கிகளில் உரிமைக்‍ கோரப்படாமல் கிடக்‍கும் டெபாசிட் தொகை, 14 ஆயிரத்து 578 கோடி ரூபாயை எட்டி உள்ளதாக மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வங்கிகளில், உரிமை கோரப்படாமல் இருக்‍கும் வைப்புத்தொகை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், 2017ம் ஆண்டு, வங்கிகளில், உரிமை கோரப்படாமல் இருந்த தொகை, 11 ஆயிரத்து 495 கோடி ரூபாயாக இருந்ததாக தெரிவித்தார். 2018ல், அது 27 சதவீதம் அதிகரித்து 14 ஆயிரத்து 578 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆயுள் காப்பீடு துறையில், 16 ஆயிரத்து 888 கோடி ரூபாய், உரிமை கோரப்படாமல் உள்ளதாகவும், ஆயுள் சாரா காப்பீடு பிரிவில், சுமார் 990 கோடி ரூபாய் கேட்பாரற்று கிடப்பதாகவும் குறிப்பிட்டார்.

வங்கிகளில், டெபாசிட் முதிர்வு காலம் முடிந்த பின்னரும், 10 ஆண்டுகள் உரிமைக் கோரப்படாமல் இருந்தால், அந்த தொகை, வாடிக்கையாளர் விழிப்புணர்வு நிதியில் சேர்க்கப்படும் என்றும், பணத்திற்கு உரியவர், உரிய ஆதாரங்களை சமர்ப்பித்தால், வட்டியுடன் டெபாசிட் தொகை திரும்ப தரப்படும் என்றும் திருமதி. நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00