வங்கிக் கடன் மோசடி - வைர வியாபாரி நிரவ் மோடி உறவினர்களின் சொத்துகளை முடக்‍க சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவு

Jul 2 2019 6:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
வங்கிக் கடன் மோசடியில் சிக்கி லண்டனில் கைது செய்யப்பட்டுள்ள வைர வியாபாரி நிரவ் மோடியின் சகோதரி மற்றும் மைத்துனரின் சொத்துக்களை முடக்க, சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில், சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து, வெளிநாடு தப்பிச்சென்ற நிரவ்மோடி, இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுக் ‍காவலில் வைக்‍கப்பட்டுள்ளார். லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், நிரவ் மோடி சார்பில் தாக்‍கல்​செய்யப்பட்ட 4 ஜாமீன் மனுக்‍களையும் நீதிபதிகள் நிராகரித்தனர்.

நிரவ் மோடியை இந்தியா கொண்டுவர மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அவர் மீது, சிபிஐ-யும், அமலாக்‍கத்துறையும், தனித்தனியாக வழக்‍கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்நிலையில், நிரவ் மோடியின் சகோதரி மற்றும் மைத்துனருக்‍கு சொந்தமாக, சிங்கப்பூரில் உள்ள சொத்துக்களை முடக்க, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்‍கத்துறையின் வேண்டுகோளை அடுத்து சிங்கப்பூர் அரசு நடவடிக்‍கை எடுத்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னர், நிரவ் மோடிக்கு சொந்தமான 4 சுவிஸ் வங்கிக்‍ கணக்‍குகள் முடக்‍கப்பட்டது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00