மக்‍களவையில் பொது பட்ஜெட் தாக்‍கல் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதன்முறையாக தாக்‍கல் செய்கிறார்

Jul 5 2019 10:00AM
எழுத்தின் அளவு: அ + அ -
மக்களவையில் நாளை பொது பட்ஜெட் தாக்‍கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் பொறுப்பேற்றிருக்‍கும் திருமதி நிர்மலா சீதாராமன் முதன்முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, மத்தியில் இரண்டாவது முறையாக பொறுப்பேற்றதையடுத்து, அரசின் முதலாவது பட்ஜெட்டை நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்ய உள்ளார். அதற்கு முன்னோட்டமாக நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை தலைமை பொருளாதார ஆலோசகர் திரு. கே.வி.சுப்பிரமணியம் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். பொருளாதார வளர்ச்சிக்‍கான இலக்கு, நிதிக்கொள்கைகள், பட்ஜெட் எதிர்பார்ப்புகள் உள்ளிட்ட அம்சங்களை இந்த ஆய்வறிக்கை உள்ளடக்கியதாக இருக்‍கும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்‍கின்றன. இந்தப் பொருளாதார ஆய்வு அறிக்‍கை அடிப்படையிலேயே நாளைய பட்ஜெட் அமையும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

வருமானவரி உச்சவரம்பு 5 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்‍கப்பட்டது தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்புத் துறைக்கு 3 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட உள்ளது. ரயில் பயணிகளின் பாதுகாப்பு, ரயில் நிலையங்களை நவீனமயமாக்கல், அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ரயில்வே பாதுகாப்புக்காக மத்திய அரசு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3369.00 Rs. 3526.00
மும்பை Rs. 3489.00 Rs. 3311.00
டெல்லி Rs. 3313.00 Rs. 3491.00
கொல்கத்தா Rs. 3313.00 Rs. 3491.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 44.50 Rs. 44500.00
மும்பை Rs. 44.50 Rs. 44500.00
டெல்லி Rs. 44.50 Rs. 44500.00
கொல்கத்தா Rs. 44.50 Rs. 44500.00