இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் வழக்கு - சர்வதேச நீதிமன்றம் வரும் 17-ம் தேதி தீர்ப்பு

Jul 5 2019 4:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் வழக்‍கில், சர்வதேச நீதிமன்றம், வரும் 17-ம் தேதி தீர்ப்பளிக்‍கிறது.

பாகிஸ்தானில் உளவு நடவடிக்‍கைகளில் ஈடுபட்டதாகவும், பயங்கரவாத செயல்களை தூண்டியதாகவும், குல்பூஷண் ஜாதவை, பாகிஸ்தான் அரசு, கடந்த 2016-ம் ஆண்டு கைது செய்தது. மேலும், அவருக்‍கு தூக்‍கு தண்டனை வழங்கி கடந்த 2017ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, நெதர்லாந்தின் தி ஹேக்‍ நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில், இந்திய தரப்பில் வழக்‍கு தொடரப்பட்டது. அப்போது, வழக்‍கு விசாரணை முடியும் வரை குல்பூஷண் ஜாதவுக்‍கு விதிக்‍கப்பட்ட தூக்‍கு தண்டனையை நிறைவேற்றக்‍கூடாது என, பாகிஸ்தானுக்‍கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இருதரப்பு வாதங்கள் முடிந்து, தீர்ப்பு தேதி, பின்னர் அறிவிக்‍கப்படும் எனக்‍கூறி விசாரணை ஒத்திவைக்‍கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்‍கின் தீர்ப்பு, வரும் 17-ம் தேதி அறிவிக்‍கப்படும் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00