உத்தரப்பிரதேசத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக பிரியங்கா காந்தி கைது - துப்பாக்‍கி சண்டையில் பலியானோர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்‍க சென்றபோது போலீஸ் நடவடிக்‍கை

Jul 19 2019 5:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தரப்பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் நடந்த துப்பாக்‍கி சண்டையில் பலியான 10 பேரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்‍க சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி. பிரியங்கா கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் நிலப்பிரச்சனை தொடர்பாக கிராம வாசிகளுக்கும், ஊர் தலைவருக்‍கும் இடையே நேற்று முன்தினம் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 10 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டனர்.

பலியானவர்களின் குடும்பங்களுக்‍கு ஆறுதல் சொல்ல, காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி. பிரியங்கா இன்று உத்தரப்பிரதேசம் சென்றார். மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், பாதிக்‍கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்திக்‍க, சம்பவம் நடைபெற்ற நாராயண்பூர் பகுதிக்‍கு செல்ல முயன்ற பிரியங்காவை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்‍கப்பட்டுள்ளதால் அனுமதிக்‍க முடியாது என தெரிவித்தனர். இதனால், தனது ஆதரவாளர்களுடன் பிரியங்கா தர்ணாவில் ஈடுப்பட்டார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00