உத்தரப்பிரதேசத்தில் பள்ளிக்‍குச் சென்ற பா.ஜ.க எம்.எல்.ஏ. மாணவர்களுக்‍கு கட்சித்துண்டு அணிவித்ததால் பரபரப்பு - பெற்றோர் அதிர்ச்சி

Jul 19 2019 6:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தரப்பிரதேசத்தில் கல்லூரி ஒன்றுக்‍கு சென்ற சென்ற அம்மாநில பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. ஒருவர், அனைத்து மாணவர்களுக்‍கும் பா.ஜ.க. துண்டை அணிவித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் சயத்ராஜா பகுதியில், ஆண், பெண் என இருபாலரும் பயிலும் ஒருங்கிணைந்த கல்லூரி அமைந்துள்ளது. கல்லூரி விழாவில் பங்கேற்க அம்மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ. திரு. சுஷில் சிங்குக்‍கு அழைப்பு விடுக்‍கப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட அவர், மாணவர்கள் அனைவருக்‍கும், வகுப்பறைக்குள் வைத்து பா.ஜ.க. துண்டை அணிவித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவம் குறித்து அவர் விளக்‍கம் அளித்துள்ளார். மாணவர்களின் வேண்டுகோளுக்‍கு இணங்கவே, தான் துண்டை அணிவித்ததாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வின் சித்தாந்தங்களை மட்டுமே மாணவர்களை பின்பற்ற சொன்னதாகவும், அவர்களை உறுப்பினர்களாக சேர்க்‍கவில்லை என்றும் கூறியுள்ளார். பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் செயலுக்‍கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00