கர்நாடக மழை சேதங்களை சீரமைக்‍க முதற்கட்டமாக 10 ஆயிரம் கோடி ரூபாய் தேவை -பிரதமரிடம் நேரில் கோரிக்‍கை விடுக்‍க இருப்பதாக முதலமைச்சர் எடியூரப்பா தகவல்

Aug 13 2019 1:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
கர்நாடகாவில் பெய்த வரலாறு காணாத மழை வெள்ளத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை மறுசீரமைப்பு செய்வதற்கு, முதற்கட்டமாக 10 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் திரு. எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கால், பொதுமக்‍களின் இயல்பு வாழ்க்‍கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், Shivamogga பகுதியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட அம்மாநில முதலமைச்சர் திரு. எடியூரப்பா, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். காணாத மழை வெள்ளத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை மறுசீரமைப்பு செய்வதற்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும், முதல் கட்டமாக 10 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்‍க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். வெள்ளம் பாதித்த பகுதிகளை, மத்திய அமைச்சர்கள் திரு. அமித்ஷா மற்றும் திருமதி நிர்மலா சீதாராமன் நேரில் பார்வையிட்டனர் என கூறினார். வரும் 16-ஆம் தேதி டெல்லிக்‍குச் சென்று பிரதமரிடம், வெள்ள நிவாரணம் குறித்து எடுத்து கூற இருப்பதாகவும் திரு. எடியூரப்பா தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3594.00 Rs. 3844.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.20 Rs. 48000.00
மும்பை Rs. 48.20 Rs. 48000.00
டெல்லி Rs. 48.20 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.20 Rs. 48000.00