ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி இல்லாமல் மக்களோடு பேசி வருகிறோம் - தலைமை ராணுவத் தளபதி பிபின் ராவத் தகவல்
Aug 13 2019 4:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானின் எந்த நடவடிக்கையையும் சந்திக்க இந்திய ராணுவம் தயாராக உள்ளதாக ராணுவ தளபதி திரு. பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
லடாக் எல்லையில், பாகிஸ்தான், போர் விமானங்களை நிறுத்தி வரும் நிலையில், ஒவ்வொரு நாடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது வழக்கம்தான் என்றும், அது குறித்து கவலைப்பட தேவையில்லை என்றும் திரு. பிபின் ராவத் கூறினார். பாகிஸ்தானின் எந்த நடவடிக்கையையும் சந்திக்க இந்திய ராணுவம் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். முந்தைய காலங்களில், காஷ்மீர் மக்களுடன் இந்திய ராணுவம் சுமூகமான உறவில் இருந்ததாகவும், அதேபோன்று, தற்போதும், அங்குள்ள மக்களை துப்பாக்கி இல்லாமல் சந்திப்போம் என்றும் திரு. பிபின் ராவத் குறிப்பிட்டார்.