ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு, பத்திரிகை தணிக்கை , இணைய சேவை துண்டிப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கு - மத்திய அரசுக்கு 2 வார அவகாசம் அளித்தது உச்சநீதிமன்றம்

Aug 13 2019 5:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜம்மு காஷ்மீரில், ஊரடங்கு உத்தரவு, பத்திரிகை தணிக்கை, இணைய சேவை துண்டிப்பு ஆகியவற்றை ரத்து செய்யக்கோரி, மத்திய அரசுக்‍கு எதிராக தொடரப்பட்ட வழக்‍கை, உச்சநீதிமன்றம் 2 வாரங்களுக்‍கு ஒத்திவைத்தது.

ஜம்மு - காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது, அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்‍கப்பட்டு, முன்னாள் முதலமைச்சர்கள் ​காவலில் வைக்‍கப்பட்டனர். மிக அதிக அளவில் ராணுவ வீரர்கள் குவிக்‍கப்ட்டதுடன், இணையதள வசதிகளும் துண்டிக்‍கப்பட்டன. பத்திரிகைகளுக்‍கு கட்டுப்பாடுகள் விதிக்‍கப்பட்டன. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளை எதிர்த்து, காங்கிரஸ் பிரமுகர் தெஹ்சீன் பூனாவாலா என்பவர், உச்சநீதிமன்றத்தில் வழக்‍கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, இன்னும் எத்தனை நாட்களுக்கு ஜம்மு காஷ்மீரில் இந்த கட்டுப்பாடுகள் தொடரும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மாநிலத்தில் முழுமையான அமைதி ஏற்படும் வரை சில கட்டுப்பாடுகள் தொடரும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்‍கப்பட்டது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீரில், அமைதி நிலவும் வரை பொறுத்திருப்போம் எனக்கூறி, உச்சநீதிமன்றம், வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3594.00 Rs. 3844.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.20 Rs. 48000.00
மும்பை Rs. 48.20 Rs. 48000.00
டெல்லி Rs. 48.20 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.20 Rs. 48000.00