ஜம்மு காஷ்மீருக்‍கான சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் - மத்திய அரசின் முடிவுக்‍கு எதிராக முன்னாள் உயரதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

Aug 19 2019 1:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசின் முடிவை எதிர்த்து பாதுகாப்புத் துறை முன்னாள் அதிகாரிகளும், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

காஷ்மீர் மத்தியஸ்தக் குழுவின் முன்னாள் உறுப்பினர் ராதா குமார், விமானப்படை முன்னாள் துணைத் தளபதி கபில் காக், முன்னாள் ராணுவ மேஜர் ஜெனரல் அசோக் குமார் மேத்தா உள்ளிட்டோர், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்‍கல் செய்துள்ளனர். அவர்கள் தாக்‍கல் செய்துள்ள மனுவில், 370வது பிரிவை ரத்து செய்யும் குடியரசுத் தலைவரின் உத்தரவை செல்லாது என அறிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஏற்னவே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்புத் துறை முன்னாள் அதிகாரிகள், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் தாக்‍கல் செய்துள்ள மனு முக்‍கியத்துவம் பெற்றுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00