தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கு : வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனு தள்ளுபடி - 6 மாதத்தில் வழக்கை விசாரித்து முடிக்க உத்தரவு

Aug 19 2019 2:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்யக்‍கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்‍கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 6 மாத காலத்தில் வழக்‍கை விசாரித்து முடிக்‍கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தெஹல்கா இணையதள பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது, அவருடைய அலுவலகத்தில் பணிபுரிந்த பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்து வழக்குத் தொடர்ந்தார். கோவாவில், விடுதி ஒன்றில், தேஜ்பால் தன்னிடம் அத்துமீறியதாக அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். இதையடுத்து கடந்த 2013ம் ஆண்டில் தருண் தேஜ்பால் கைது செய்யப்பட்டு, 2014ல் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இது பொய்யான வழக்கு என்றும், எனவே, வழக்‍கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்‍கல் செய்யப்பட்டது. கோவா விடுதியின் சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவை நீதிமன்றத்தில் தாக்‍கல் செய்யப்பட்ட நிலையில், தேஜ்ஜபால் தரப்பில் தாக்‍கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம், இன்று தள்ளுபடி செய்தது. 6 மாத காலத்தில் வழக்‍கை விசாரித்து முடிக்‍கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00