இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி - ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்

Aug 22 2019 8:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜி-7 மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக இன்று ஃபிரான்ஸ் புறப்பட்டு சென்றார்.

ஃபிரான்சில் வரும் 24-ம் தேதிமுதல் 26-ஆம் தேதி வரை ஜி7 நாடுகளின் 45-ஆவது உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்க வேண்டுமென்று ஃபிரான்ஸ் அதிபர் Emmanuel Macron, பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதனை பிரதமர் திரு. மோடி ஏற்றுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து, ஜி-7 மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி, டெல்லியில் இருந்து இன்று ஃபிரான்சுக்‍கு புறப்பட்டார். அவரை உயரதிகாரிகள் பலர் வழியனுப்பி வைத்தனர். இந்த பயணத்தின் போது ஃபிரான்ஸ் அதிபர் Emmanuel Macron மற்றும் பிரதமர் Edouard Philippe ஆகியோரை பிரதமர் திரு. மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

சர்வதேச அளவில் இந்தியா பொருளாதார ரீதியாக வலுவாக வளர்ந்து வரும் நிலையில்,ஜி7 மாநாட்டில் பிரதமர் திரு.மோடி பங்கேற்பதன் மூலம் சர்வதேச அளவில் இந்தியாவின் வளர்ச்சிக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00