காஷ்மீர் பிரச்னையில் 3-வது நாடு தலையிடக்‍ கூடாது - பிரதமர் மோடியுடனான பேச்சுவார்த்தைக்‍குப் பிறகு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்‍ரான் அறிவிப்பு

Aug 23 2019 8:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவின் காஷ்மீர் விவகாரத்தில் 3-வது நாடு தலையிடக்‍கூடாது என ஃபிரான்ஸ் அதிபர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி, 2 நாள் பயணமாக ஃபிரான்ஸ் சென்றுள்ளார். தலைநகர் பாரீஸில் நேற்று அவருக்‍கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், Chantilly நகரில், அந்நாட்டு அதிபர் Emmanuel Macron சந்தித்து, பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத்தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய ஃபிரான்ஸ் அதிபர் Emmanuel Macron, இந்திய பிரதமராக 2-வது முறையாக பொறுப்பேற்ற பிரதமர் மோடியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவும் G-7 அமைப்பில் அங்கம் வகிக்க வேண்டும் என தாங்கள் விரும்புவதாகவும், அதற்காக இந்த அமைப்பில் சில மாற்றங்களை செய்துள்ளதாகவும் கூறினார். ஏனெனில் இந்தியாவின் பங்களிப்பு அவசியம் என்றும், G-7 அமைப்பில் அவர்கள் இடம் பெறுவது முக்கியம் என்றும் கூறினார்.

புல்வாமா தாக்குதலுக்கு இரங்கல் தெரிவித்ததாக கூறிய Macron, பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும், ஃபிரான்சும் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்றும், 'மேக் இன் இந்தியா' திட்டத்தில் ஃபிரான்சின் பங்களிப்பு இருக்கும் என்றும் கூறினார்.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எடுத்த முடிவு அவர்களது அரசுரிமை என்றும், காஷ்மீர் பிரச்னைக்‍கு இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் குறிப்பிட்ட அவர், இதில் மூன்றாம் நபரின் தலையீடு இதில் இருக்கக்கூடாது என்றும் Macron திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க தாம் ஆர்வமாக உள்ளதாக கூறினார். இந்தியா-ஃபிரான்ஸ் இடையே சுமூக உறவு தொடர்வதாக தெரிவித்த பிரதமர் மோடி, ஃபிரான்ஸிடமிருந்து வாங்க உள்ள ரஃபேல் விமானங்களில், முதல் விமானம் அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைக்‍கப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். சிவில் அணுசக்‍தி ஒப்பந்தத்தில் இந்தியாவுடன் முதல்நாடாக கையெழுத்திட்டது ஃபிரான்ஸ் என்றும் அப்போது திரு. மோடி சுட்டிக்‍காட்டினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00