அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பிரதமருக்‍கு உற்சாக வரவேற்பு - அந்நாட்டின் உயரிய ஜயீத் விருது இன்று வழங்கப்படவுள்ளது

Aug 24 2019 11:45AM
எழுத்தின் அளவு: அ + அ -

அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் திரு. மோடிக்‍கு, அபுதாபி விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்‍கப்பட்டது. அந்நாட்டின் உயரிய விருதான ஜயீத் விருது, பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று வழங்கப்படவுள்ளது.

பிரான்சு, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு 5 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் திரு. மோடி, முதல்கட்டமாக நேற்று முன்தினம் பிரான்சு சென்றார். அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகள் இடையே 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பிரான்ஸ் பயணத்தை முடித்து கொண்டு ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பிரதமர் மோடிக்கு அபுதாபி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அபுதாபி இளவரசர் முகமது பின் சையது பிரதமர் மோடியை வரவேற்றார். இருநாட்டு உறவுகள் குறித்தும், பிராந்திய மற்றும் சர்வதேச விஷயங்கள் குறித்தும் இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர்.

அந்நாட்டில் பணமில்லா பரிவர்த்தனையை எளிதில் மேற்கொள்ளும் வகையில் ரூபே அட்டையை பிரதமர் அறிமுகப்படுத்த உள்ளார். மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ஜயீத் விருது, பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று வழங்கப்படவுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00