தமிழகம் உள்ளிட்ட 13 மாநில சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடு, நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இல்லை : மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் குற்றச்சாட்டு

Aug 24 2019 12:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாடு முழுவதும் உள்ள பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில், தமிழகம் உள்ளிட்ட 13 மாநில சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடு, நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இல்லை என மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் குற்றம் சாட்டியுள்ளது.

கழிவுநீரை சுத்திகரித்து, மீண்டும் பயன்படுத்தும் வகையில், நாடெங்கும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யும்படி, மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்துக்‍கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி நடைபெற்ற ஆய்வில், நாடு முழுவதும் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில், 124 சுத்திகரிப்பு நிலையங்கள் வெளியேற்றும் நீரின் தரம், மிகவும் மோசமாக உள்ளது தெரிய வந்துள்ளது. இதில், தமிழகத்தில் 34, மஹாராஷ்ட்ராவில் 24, ராஜஸ்தானில் 13, ஹரியானாவில் 14, கர்நாடகாவில் 11 என 13 மாநிலங்களில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடுகள், நிர்ணயிக்‍கப்பட்ட தரத்தில் இல்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, அந்தந்த மாநிலங்களுக்‍கு, மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம், தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளது. கடிதத்தில், சுத்திகரித்து வெளியேற்றப்படும் நீரின் தரத்தை உயர்த்தும்வகையில் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00