ராகுல் காந்தி தலைமையில் ஸ்ரீநகர் சென்ற எதிர்க்‍கட்சி பிரதிநிதிகளுக்‍கு அனுமதி மறுப்பு - ஜம்மு-காஷ்மீர் நிலவரத்தை அறியச் சென்ற குழுவினர் திருப்பி அனுப்பப்பட்டனர்

Aug 24 2019 3:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் நி‌லவரத்தை அறிய சென்ற, காங்கிரஸ் எம்.பி., திரு. ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி குழுவுக்கு, ஸ்ரீநகரில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. Roll Visual ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை, மத்திய அரசு ரத்து செய்தது. அப்போது, அந்த மாநிலத்தின் பிரதான அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக, காங்கிரஸ் உள்ளி‌ட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால் இதை, மத்திய அரசு மறுத்தது. இந்நிலையில் இன்று காலை, ஜம்மு - காஷ்மீர் மாநில நிலவரத்‌‌தை அறிய, காங்கிரஸ் எம்.பி., திரு.ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சிகள் குழு, டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டனர்.

இந்த குழுவில், காங்கிரஸ் மூத்த த‌லைவர் திரு. குலாம்நபி ஆசாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் திரு. டி. ராஜா உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர். ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு வந்த திரு. ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சி குழுவை, அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அவர்களை, விமான நி‌லையத்தில் இருந்து வெளியேற அனுமதிக்கவில்லை. எதிர்க்கட்சி குழுவை டெல்லிக்கே திரும்பச் செல்லும்படி, அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00