டெல்லி பா.ஜ.க. தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது அருண்ஜேட்லி உடல் - பாரதிய ஜனதா தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி
Aug 25 2019 12:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் காலமான பாரதிய ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண்ஜேட்லியின் உடல் அக்கட்சித் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா தலைவர்கள், தொண்டர்கள், மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். இதையடுத்து, டெல்லி கைலாஷ் காலனியில் உடல் வைக்கப்பட்டு, ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், இன்று காலை அருண்ஜேட்லியின் உடல், அவரது இல்லத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பாரதிய ஜனதா தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பாரதிய ஜனதா தலைவர்கள், தொண்டர்கள், மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இன்று பிற்பகல் அருண்ஜேட்லியின் உடல், பா.ஜ.க அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, யமுனை ஆற்றங்கரையில் உள்ள நிகம்போட் காட் பகுதியில், இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.