முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜேட்லியின் உடல், முழு அரசு மரியாதையுடன் தகனம் - மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க மூத்த தலைவர்கள், தொண்டர்கள் இறுதியஞ்சலி

Aug 25 2019 5:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாரதிய ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண்ஜேட்லியின் உடல், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். இதையடுத்து, டெல்லி பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் வைக்‍கப்பட்டிருந்த அருண்ஜேட்லியின் உடலுக்‍கு, மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா, பா.ஜ.க செயல் தலைவர் திரு.ஜே.பி.நட்டா, பாதுகாப்பு அமைச்சர் திரு.ராஜ்நாத்சிங், மத்திய அமைச்சர்கள் திரு.ஹர்ஷ் வர்தன், திரு.பியூஷ் கோயல், ஜார்கண்ட் முதலமைச்சர் திரு.ரகுபார் தாஸ் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, அவரது உடல், இறுதிச்சடங்கிற்காக யமுனை ஆற்றங்கரைக்‍கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள நிகம்போட் காட் பகுதியில் இறுதிச்சடங்கு நடைபெற்றது. 21 குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் அருண்ஜேட்லியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இறுதிச்சடங்கில் மத்திய அமைச்சர்கள், பாரதிய ஜனதா மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00