சத்தீஸ்கர், கேரளா, திரிபுரா, உத்தரப்பிரதேசத்தில் 4 தொகுதிகளில் அடுத்த மாதம் 23-ம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Aug 25 2019 5:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

சத்தீஸ்கர், கேரளா, திரிபுரா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில், காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு, செப்டம்பர் 23 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தின், தண்டேவாடா, கேரள மாநிலத்தின் பலா, திரிபுரா மாநிலத்தின், பாதர்காட், உத்தரப்பிரதேச மாநிலத்தின், அமிர்பூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு, செப்டம்பர் 23 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், ஆகஸ்ட் 28 ஆம் தேதி துவங்குவதாகவும், வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள், செப்டம்பர் 4-ம் தேதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு பரிசீலனை, செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெறும் என்றும், வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான க‌டைசி நாள், செப்டம்பர் 7-ம் தேதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 23 ஆம் தேதி, வாக்குப்பதிவு நடை‍பெறும் என்றும், பதிவான வாக்குகள், செப்டம்பர் 27 ஆம் தேதி எண்ணப்படும் என்றும் தலை‌மை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00