ஜம்மு-காஷ்மீரில் மினி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : 7 பேர் உயிரிழப்பு - 25 பேர் படுகாயம்

Aug 26 2019 10:43AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு-காஷ்மீரில் மினி பேருந்து ஒன்று, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்‍குள்ளானதில், 7 பேர் உயிரிழந்தனர். 25 பேர் படுகாயமடைந்தனர்.

ஜம்மு-காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கனேட்டர் கிராமத்தில் இருந்து ரஜோரி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான ஷாட்ரா ஷெரீப் என்ற புனித தலத்திற்கு, 32 பயணிகளை ஏற்றிக்கொண்டு மினி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. மதியம் தேரா கி கலி பகுதிக்கு அருகிலுள்ள மேகி மோர் என்ற இடத்தில் சென்றபோது, பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், உள்ளூர்வாசிகளுடன் சேர்ந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் மேலும் இரண்டு பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00