அசாம் தேசிய குடிமக்கள் இறுதிப்பட்டியலில் இடம் பெறாதவர்களை நாடு கடத்த முடிவு - எல்லை அருகே அகதிகள் முகாம் அமைத்து தங்க வைக்கவும் மத்திய அரசு தீவிரம்

Sep 11 2019 6:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
அசாம் தேசிய குடிமக்கள் இறுதிப்பட்டியலில் இடம் பெறாதவர்களை நாடு கடத்தவும், எல்லை அருகே அகதிகள் முகாம் அமைத்து தங்க வைக்கவும் மத்திய அரசு நடவடிக்‍கை மேற்கொண்டு வருகிறது.

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில், அசாம் மாநிலத்தில், குடிமக்கள் தேசிய பதிவேடு கொண்டு வரப்பட்டது. அசாம் தேசிய குடிமக்கள் இறுதிப்பட்டியல் கடந்த மாதம் 31ம் தேதி வெளியிடப்பட்டது.

இதில் 3 கோடியே 11 லட்சம் மக்‍களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. சுமார் 19 லட்சம் மக்‍களின் பெயர்கள் சேர்க்‍கப்படவில்லை. முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்‍கப்படாததால், 19 லட்சம் பேர் இறுதிப்பட்டியலில் இடம்பெறவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்‍கப்பட்டது. பெயர் விடுபட்டவர்கள், தங்கள் இந்திய குடியுரிமையை நிரூபிக்‍க, வெளிநாட்டு தீர்ப்பாயத்தில் முறையிடலாம் என அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், அசாம் தேசிய குடிமக்கள் பட்டியலில் இடம்பெறாதவர்களை நோட்டீஸ் கொடுத்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அவர்களை நாடு கடத்தவும், எல்லை அருகே அகதிகள் முகாம் அமைத்து தங்க வைக்கவும், ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகிவுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00