ஐ.என்.எக்ஸ். மீடியா சட்டவிரோத பண பரிமாற்ற வழக்‍கு - ப.சிதம்பரம் ஜாமின் மனு மீது பதிலளிக்‍க, சிபிஐ-க்‍கு, டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Sep 12 2019 1:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐ.என்.எக்ஸ். மீடியா சட்டவிரோத பண பரிமாற்ற வழக்‍கில், ப.சிதம்பரம் தாக்‍கல் செய்துள்ள ஜாமின் மனு மீது பதிலளிக்‍க, சிபிஐ-க்‍கு, டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐ.என்.எக்‍ஸ். மீடியா முறைகேடு வழக்‍கில் ப.சிதம்பரம் சார்பில் தாக்‍கல் செய்யப்பட்ட முன் ஜாமின் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இதனைத்தொடர்ந்து, சிதம்பரத்தை, வரும் 19-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்‍க டெல்லி சிபிஐ நீதிமன்றம் கடந்த 5-ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து சிதம்பரம், டெல்லி திகார் சிறையில் அடைக்‍கப்பட்டார்.

சிபிஐ-ன் கைது நடவடிக்‍கை மற்றும் நீதிமன்ற காவலை எதிர்த்து, ப.சிதம்பரம் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று ஜாமின் மனுக்‍கள் தாக்‍கல் செய்யப்பட்டன. இன்று நடைபெற்ற வழக்‍கு விசாரணையில், முன்ஜாமின் கோரி, முதலில், கீழமை நீதிமன்றத்தை அணுகாமல், உச்சநீதிமன்றத்தை அணுகியது ஏன் என, சிதம்பரம் தரப்பிற்கு டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மேலும், சிதம்பரம் ஜாமின் மனு மீது பதிலளிக்‍க சிபிஐ-க்‍கு உத்தரவிட்டது. ஐ.என்.எக்‍ஸ். மீடியா வழக்‍கு தொடர்பாக, இதுவரை நடத்திய விசாரணை தொடர்பான அறிக்‍கையையும், ஒரு வாரத்திற்குள் தாக்‍கல் செய்ய சிபிஐ-க்‍கு உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்‍கு விசாரணை வரும் 23-ம் தேதிக்‍கு ஒத்திவைக்‍கப்பட்டது. இதனிடையே, நீதிமன்ற காவலை எதிர்த்து தாக்‍கல் செய்யப்பட்ட மனுவை, சிதம்பரம் தரப்பு, வாபஸ் பெற்றுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00